பள்ளிகளின் கவனத்திற்கு... மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

author img

By

Published : May 12, 2022, 1:43 PM IST

பள்ளிகளின் கவனத்திற்கு.

கோடை வெப்பம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

டெல்லி: கோடை வெப்பம் காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளாவன:

  • பள்ளிகள் திறப்பின் நேரத்தை முன்கூட்டியே, அதாவது காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு மதியத்திற்குள் முடிக்கலாம்.
  • மாணவர்களை சூரிய ஒளியில் நேரடியாக விளையாடவோ, நடமாடவோ அனுமதிக்க வேண்டாம்.
  • அதேபோல் காலை நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.
  • பள்ளி வாகனங்களில் கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் தண்ணீர் பாட்டில்கள், தலைக்கு தொப்பிகள், குடைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். திறந்த வெளியில் இருக்கும்போது அவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • குளிர்ந்த குடிநீர் பல இடங்களில் கிடைப்பதை பள்ளி உறுதி செய்யவேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது தண்ணீர் குடிக்க மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
  • பள்ளியில் அனைத்து வகுப்பறைகளும் சரியான காற்றோட்டமாக இருப்பதையும், அனைத்து மின்விசிறிகள் செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டும். அதேபோல் மாணவர்கள் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
  • பள்ளியின் கழுத்து டை போன்ற வற்றுக்கு விலக்கு அளிக்கலாம்.
  • பள்ளிகளில் உப்பு, சர்க்கரை கரைசல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு லேசான வெப்ப தாகம் ஏற்பட்டால்கூட அவர்களுக்கு முதலுதவி அளிக்க பயிற்சி பெற்றவர்கள் இருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு பிரச்சினை அதிகம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைகளை அணுகுவதை பள்ளிகள் உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில் அத்தியாவசியமான மருத்துவப்பெட்டிகள் அதாவது முதலுதவி பெட்டிகள் இருக்க வேண்டும்.
  • தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்.
  • அதேபோல் தேர்வு நேரங்களில் மாணவர்களு்ககு எளிதில் குடிநீர் கிடைப்பதை தேர்வு மையங்கள் உறுதி செய்யவேண்டும்.

இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க: '35 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் ஆர்எஸ்எஸ்.. திட்டம் என்ன?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.