ETV Bharat / bharat

பதுங்குக் குழியில் 15 நாள்கள்... பகத் சிங் பதுங்கிய வீடு!

author img

By

Published : Oct 9, 2021, 5:05 AM IST

அந்த வீட்டில் பதுங்குக் குழி ஒன்று இருந்தது. அந்தப் பதுங்குக் குழியில் சிங் பாதுகாப்பாக தங்கியிருந்தார். அங்கு 15 நாள்களை கழித்தார்.

Bhagat Singh and his aides' hideout from Britishers
Bhagat Singh and his aides' hideout from Britishers

கந்தகோஷ் (மேற்கு வங்கம்) : விடுதலை வீரர் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பழிதீர்க்க பகத்சிங்கும் அவரது கூட்டாளிகளும் ஆங்கிலேய காவல் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை, கொல்ல முயன்றனர்.

ஆனால் தவறுதலாக, உதவி கண்காணிப்பாளர் ஜான் சாண்டர்ஸைக் வேட்டையாடிவிட்டனர். அங்கிருந்து சிங்கும், அவரது கூட்டாளிகளும் அப்போதைய பிரிக்கப்படாத பர்த்வான் மாவட்டத்திற்கு (மேற்கு வங்கம்) தப்பிச் சென்றனர்.

பதுங்குக் குழியில் பகத் சிங்

தொடக்கத்தில், அவர்கள் பதுகேஷ்வர் தத்தாவின் இல்லத்தில் தஞ்சமடைந்தனர். காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது கடினம் என்பதை உணர்ந்து, கோஷ் குடும்பத்திற்கு சொந்தமான அருகிலுள்ள வீட்டின் இரகசிய பதுங்குகுழியில் தங்கினர். இந்த வீடு கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கந்தகோஷின் உயரி கிராமத்தில் உள்ளது.

Bhagat Singh and his aides' hideout from Britishers
பகத் சிங் பதுங்கிய வீடு

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முனைவர் சர்பஜித் ஜாஷ் கூறுகையில், “சாண்டர்ஸ் கொல்லப்பட்ட பிறகு பகத்சிங்குக்கு நம்பிக்கைக்குரிய பாதுகாப்பான ஒரு புகழிடம் தேவைப்பட்டது. அப்போதுதான் பதுகேஷ்வர் தத்தா, பகத் சிங்கை அவருடன் தனது கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

முதலில், அவர்கள் ரயிலில் பர்த்வான் நிலையத்தை அடைந்தனர். சிங்கை தனது சொந்த வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த வீட்டில் பதுங்குக் குழி ஒன்று இருந்தது. அந்தப் பதுங்குக் குழியில் சிங் பாதுகாப்பாக தங்கியிருந்தார். அங்கு 15 நாள்களை கழித்தார்” என்றார்.

நாடாளுமன்ற தாக்குதல் திட்டம்

புரட்சியாளர் பதுகேஷ்வர், தனது அருகாமையில் வசித்த பாரம்பரிய வீட்டுக்கு பகத் சிங்கை அழைத்து வந்தார். அந்த வீட்டில் பிரத்யேகமாக பதுங்கு தளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. டெல்லி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் அங்கிருந்துதான் தயாரிக்கப்பட்டது.

Bhagat Singh and his aides' hideout from Britishers
பகத் சிங் பதுங்கிய வீட்டின் வெளிப்புறத் தோற்றம்

வீட்டில் உள்ள இரகசிய பதுங்கு தளம் அழகிய வேலைபாடுகளுடன் உடையது. அதிலிருந்து மற்ற இடங்களுக்கும் பாதுகாப்பாக செல்லலாம். ஆனால் அவை தற்போது உயிர்ப்புடன் இல்லை, வௌவால்கள் வாழும் குகையாக காணப்படுகின்றது.

இது பற்றி அப்பகுதிவாசி சம்புநாத் தாஸ், “இது கோஷ் குடும்பத்தை சேர்ந்த மூதாதையர்கள் வாழ்ந்த வீடு. இந்தப் பாதுகாப்பான இடத்தை கோஷ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பகத் சிங்குக்கு அளித்தார்.

அருங்காட்சியகமாக மாற்ற கோரிக்கை

தத்தாவும், சிங்கும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அங்கிருந்து அவர்கள் உள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்து பங்குரா வழியாக தப்பினர்” என்றர்.

இந்த வீடு தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனிதர்கள் வசிக்க முடியாது. கோஷ் குடும்பத்தின் வம்சாவளிகள் இந்த வீட்டை அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசும் அவர்களின் கோரிக்கைகக்கு செவி சாய்த்துள்ளது.

பதுங்குக் குழியில் 15 நாள்கள்... பகத் சிங் பதுங்கிய வீடு!

இது குறித்து பேசும் கோஷ் குடும்பத்தைச் சேர்ந்த ரேகா கோஷ், “இந்த வீட்டை அரசு எடுத்துகிட்டு, அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும்.

வரலாற்றின் மௌனமான சாட்சி

உரிய இழப்பீட்டை பெற்றுக்கொண்டு நாங்கள் இங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றுவிடுவோம்” என்றார். கோஷ் குடும்பம் மட்டுமல்ல பொதுமக்களும் இந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுதேசி இயக்கத்தின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றான கந்தகோஷில் உள்ள கோஷ் குடும்பத்தின் வீடு இன்றளவும் வரலாற்றின் சாட்சியாக உள்ளது. வரலாற்றின் இந்த மௌன அடையாளம், அருங்காட்சியகமாக மாற வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் திண்ணம்.

இதையும் படிங்க : இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையப்புள்ளி சபர்மதி ஆசிரமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.