கள்ளகாதலர்களோடு சேர்ந்து முதியரை கொன்ற பெண்... நடந்தது என்ன?
Published: Nov 29, 2022, 11:31 AM


கள்ளகாதலர்களோடு சேர்ந்து முதியரை கொன்ற பெண்... நடந்தது என்ன?
Published: Nov 29, 2022, 11:31 AM
பீகாரில் வயது முதிர்ந்த கள்ளகாதலர்களோடு சேர்ந்து 30 வயது பெண் முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாலந்தா: பீகாரில் உள்ள நாலந்தாவில் 75 வயதான திரிபித் ஷர்மா என்பவரை கொலை செய்ததாக நான்கு வயது முதிர்ந்த நபர்கள் மற்றும் 30 வயது பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாலந்தாவின் அஸ்தவான் உள்ள வீட்டில் தண்ணீர் தொட்டியில் திரிபிட் சர்மா (75) இறந்து கிடந்ததாக அவரது மகன் மிது குமார், அக்டோபர் 21 அன்று அஸ்தவான் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,
“ சந்தேகத்திற்குரிய நபர்களை விசாரிக்க தொடங்கினோம். அப்போது பினு தேவி(30) என்னும் பெண்ணுடன் திரிபிட் சர்மா தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் இறந்த பின், அவர் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
அந்த டீக்கடைக்கு தினமும் வந்த திரிபிட் சர்மா மற்றும் நான்கு வயதான ஆண்களுடன், பினு தேவிக்கு பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக பழகி வந்துள்ளனர். ஆனால் திரிபுட் ஷர்மாவுடன் பினு நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த மற்ற ஆண்கள் பினு தேவியை அவரை விட்டு விலகும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய போது ஷர்மா விலக மறுத்ததாக தெரிகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இது குறித்த வாக்குவாதம் முற்றி அனைவரும் சேர்ந்து திட்டம் போட்டு சஹ்ர்மாவை கொன்றுள்ளனர்.
விசாரணைக்குப் பிறகுகிருஷ்ணானந்தன் பிரசாத் (75), சூர்யமணி குமார் (60), வாசுதேவ் பாஸ்வான் (63), பனாரஸ் பிரசாத் என்கிற லோஹா. சிங் (62), மற்றும் பினு தேவி (30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியின் காதை வெட்டிய கணவர்.. சென்னையில் நடந்தது என்ன?
