ETV Bharat / bharat

தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துங்கள் - பத்து மாநிலங்களுக்கு அறிவுரை

author img

By

Published : Oct 27, 2021, 9:11 PM IST

Mansukh Mandaviya
Mansukh Mandaviya

நாட்டின் பத்து மாநிலங்கள் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை முடுக்கிவிட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் தடுப்பூசி திட்டம் குறித்து பல்வேறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

நாட்டில் இதுவரை ஒரு கோடியே நான்கு லட்சத்துக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 20 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டாம் டோஸ் காலக்கெடுவைத் தாண்டியும் அதை செலுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ஒரு கோடியே 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை காலக்கெடுத் தாண்டி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த மாநிலங்கள் விரைந்து தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பிகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, தமிழ்நாடு, நாகாலாந்து, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி திட்டத்தை முடுக்கிவிட வேண்டும் என ஆலோசனையின்போது வலியுறுத்தப்பட்டது.

மாநிலங்களின் கைகளில் சுமார் 12 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'பெகாசஸ்' இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.