2026 பானைகளில் பொங்கல் வைத்து உலக சாதனை - 2026 PONGAL SAME TIME
🎬 Watch Now: Feature Video

Published : January 10, 2026 at 10:53 AM IST
சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் 2026 பானைகளில் பெண்கள் பொங்கலிட்ட சம்பவம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுதுள்ளது.
மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் திராவிட பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் அ.ம.துரை வீரமணி ஏற்பாட்டில் கலைஞர் திடல் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சீர்காழியில் இருந்து 10 ஆயிரம் கரும்புகள் வரவழைக்கப்பட்டு அரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. அதே போல் திராவிட பொங்கல் திருவிழாவிற்காக பிரத்யேகமாக தஞ்சையில் இருந்து 1.5 டன் அரிசி, வேலூரில் இருந்து 1.5 டன் வெல்லம், விழுப்புரத்தில் இருந்து 2026 பொங்கல் பானை வரவழைக்கப்பட்டது.
இதில் சாதி, மத பேதமின்றி 2026 பெண்கள் திமுகவின் கருப்பு, சிவப்பு புடவை அணிந்து ஒரே நேரத்தில் 2026 புதுப்பனையில் பொங்கலிட்டு கொண்டாடினர். ஒரே நேரத்தில் 2026 பெண்கள் பொங்கலிட்டது ராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த திராவிட பொங்கல் திருவிழாவை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.