குழந்தைகளுடன் விளையாடிய எம்எல்ஏக்கள் - ANGANWADI OPENING IN KANCHI
🎬 Watch Now: Feature Video

Published : March 11, 2026 at 6:50 PM IST
காஞ்சிபுரம்: புதிய அரசு அங்கன்வாடி மையத்தை திறக்க சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும் கிரீடம் வைத்தும் விளையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி மேயர் நிதியிலிருந்து ரூ.3 கோடி மதிப்பில் அங்கன்வாடி மையம், புதிய பள்ளி கட்டடம், பூங்கா சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர்.
மேலும், அங்கன்வாடி மையத்திற்கு இன்று வந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து சிறப்பான வரவேற்பு அளித்து எம்எல்ஏக்கள் விளையாடினர்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட 40 வது வார்டு பல்லவன் நகர் பகுதியில் பூங்காவை சீரமைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர்களிடம் அப்பகுதி பெண்கள், ஆண்களுக்கும் மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.