புதுச்சேரியில் விஜய் பரப்புரை - நேரலை காட்சிகள் - TVK VIJAY PUDUCHERRY CAMPAIGN

🎬 Watch Now: Feature Video

thumbnail
தவெக பொதுக்கூட்டத்தில் திரண்டுள்ள தொண்டர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 9, 2025 at 10:45 AM IST

1 Min Read
Choose ETV Bharat

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மாவட்டவாரியாக பரப்புரையை தொடங்கினார். கடந்த  செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிப்புரத்தில் நடைபெற்ற பரப்புரையின்போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.  அதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 23-ம் தேதி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரியில் அவர் அந்த மாவட்ட மக்களை சந்தித்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 தவெக தொண்டர்கள், பொதுமக்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் சென்னைக்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு விஜய் இன்று வருகை புரிந்துள்ளார். அங்கு உப்பளம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற உள்ளார்.அதன் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.

ABOUT THE AUTHOR

...view details