திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் - நேரலை காட்சிகள் - TVK VIJAY IN TRICHY

🎬 Watch Now: Feature Video

thumbnail
தவெக விஜய் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 19, 2026 at 3:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்.23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை தக்க வைக்கவும், இழந்த ஆட்சியை கைப்பற்றவும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன.

இதற்கிடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் புதிதாக களம் காண உள்ளதால், நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து  விஜய்யும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று அவர், தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details