LIVE விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் - கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா? எகிறும் எதிர்பார்ப்பு - TVK MEETING LIVE
🎬 Watch Now: Feature Video

Published : January 25, 2026 at 11:03 AM IST
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் விஜய் வழங்குவார் எனத் தெரிகிறது. முக்கியமாக, இந்த கூட்டத்தின் போது, தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என யூகங்கள் கிளம்பியதால் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் 3,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஸ் வழங்கப்பட்டதால் வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
அண்மையில் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், சின்னத்தை பரப்பும் விதமாக இந்த ஆலோசனைக் கூட்ட அரங்கமும் விசில் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை கிட்டத்தட்ட தங்கள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்துவிட்டன. ஆனால், ஆட்சியில் பங்கு தருவோம் எனக் கூறியும் இதுவரை விஜய்யின் தவெக பக்கம் எந்தக் கட்சியும் செல்லவில்லை.
இதனால் வரும் தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் என ஒருதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், அதிமுக - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைவார் என மற்றொரு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
ஆனால், இப்போது வரை தணிக்கை வாரியத்துக்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ விஜய் வாய் திறக்கவில்லை. எனவே, பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான தனது நிலைப்பாட்டை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.