LIVE: ஈரோட்டில் அலைகடலென குவிந்த தவெக தொண்டர்கள்; பிரச்சாரத்தை தொடங்கினார் விஜய்! - VIJAY CAMPAIGN

🎬 Watch Now: Feature Video

thumbnail
தவெக தலைவர் விஜய் பரப்புரை (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 18, 2025 at 11:15 AM IST

|

Updated : December 18, 2025 at 12:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் இதுவரை திருச்சி, நாகை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரையை அவர் நிறைவு செய்துள்ளார். கரூரில் செப்.27இல் நடைபெற்ற பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது தேர்தல் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் பரப்புரையை தொடங்கிய விஜய், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக இன்று அவர் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வந்தார். 

இதற்கிடையே, கரூர் அசம்பாவிதத்தை கருத்தில் கொண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 11.30 மணி அளவில் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வரும் தவெக தலைவர் விஜய், பரப்புரையை தொடங்குகினார்.

Last Updated : December 18, 2025 at 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details