தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு - நேரலை காட்சிகள் - TVK ELECTION MANIFESTO
🎬 Watch Now: Feature Video

Published : April 16, 2026 at 3:44 PM IST
தவெகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அரசியல் களம் அனல் பறக்கிறது. அரசியலில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் களம் காணும் தவெக தலைவர் விஜய், இன்று சட்டமன்ற தேர்தலுக்கான அக்கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து வெளியிட்டு வருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, 800 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கியுள்ளதால், க்யூ-ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் நேரலை வாயிலாக நிகழ்வைக் கண்டு, ஒத்துழைக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், வெற்றி பயணத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், பிறக்கும் குழந்தைக்கு தாய்மாமன் சீராக தங்க மோதிரம் மற்றும் குழந்தை வரவேற்பு கிட், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை உள்ளிட்ட வாக்குறுதிகளை தமது பரப்புரைகளின் போது விஜய் வெளியிட்டிருந்தார்.