தஞ்சாவூரில் தவெக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் விஜய் - VIJAY

🎬 Watch Now: Feature Video

thumbnail
தஞ்சாவூர் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் விஜய் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 11:35 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தவெக தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாச்சாமிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கியுள்ளது. சுமார் 10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள திடலில், சுமார் 4,900 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அத்துடன் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

நிகழ்ச்சி ஏற்பாடுகளை த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். க்யூஆர் கோடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பல சோதனைக்கு பிறகே கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சேலம், வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் நிர்வாகிகளைச் சந்திக்கும் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக - தேமுதிக கூட்டணி வைத்தது தொடர்பாக விஜய் தனது நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடங்கிய அன்று அண்ணன் விஜயகாந்த் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டும், புகழ்ந்தும் பேசிய விஜய், தற்போது தேமுதிகவை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக, விஜய்யின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிப்பாரா என்ர கேள்வியும் எழுந்துள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details