மலை ரயில் 2-வது நாளாக ரத்து - COONOOR METTUPALAYAM TRAIN CANCEL

🎬 Watch Now: Feature Video

thumbnail
ரயில் போக்குவரத்து 2-வது நாளாக ரத்து (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 3, 2026 at 4:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நீலகிரி: தொடர் மழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து இரண்டாம் நாளாக ரத்து செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கனமழையால் 21.5 செ.மீ. அளவு மழை கொட்டித் தீர்த்தது. தொடர் மழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.

மேலும், மலை ரயில் பாதையில் ஆடர்லி ஹில்கிரோ போன்ற பகுதிகளில் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் போக்குவரத்து இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இன்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விரைவில் பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மலை ரயிலில் பயணிக்க ஆர்வமுடன் இருந்த சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பாதிப்படைந்த பகுதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தி உள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details