LIVE: 77-வது குடியரசு தினம்: சென்னை மெரினா கடற்கரையில் கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என் ரவி - 77TH REPUBLIC DAY

🎬 Watch Now: Feature Video

thumbnail
குடியரசு தின விழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 26, 2026 at 7:52 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நமது நாட்டின் 77வது குடியரசு தின விழாவானது தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே கொண்டாடப்படுகிறது. காலை 8 மணியளவில் நடைபெறுகிற இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி கொடியேற்றுவது இது ஐந்தாவது முறை. பிறகு காவல்துறை உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்கள் புரிந்தோருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதக்கங்களை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் விழா நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஒரு லட்சம் போலீசார் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடியேற்ற விழாவில் பங்கேற்க வருகைபுரியும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும், தலைமைச் செயலர் நா. முருகானந்தனும் வரவேற்பு அளிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details