வீடியோ: தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் கேள்வி நேரம்
🎬 Watch Now: Feature Video

Published : August 27, 2026 at 9:33 AM IST
|Updated : August 27, 2026 at 7:32 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 7, 10,11 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதமும், 12-ஆம் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரும் பதிலுரையும் இடம்பெற்றது. இந்த நிலையில், 17-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 27 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. நேற்று மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டசபை மீண்டும் கூடுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை கேள்வி எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று முதல் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. பொதுவாக, கேள்வி நேரத்தில் 10 கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.