பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மகிழ்ச்சியுடன் எழுதிய மாணவிகள் - 10TH GRADE EXAMS BEGINS
🎬 Watch Now: Feature Video

Published : March 11, 2026 at 4:36 PM IST
திருவள்ளூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை திருவள்ளூரில் உள்ள ராஜ்மல் மிஸ்ரிலால் ஜெயின் பள்ளியில் மாணவிகள் உற்சாகமாக எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று மார்ச் 11ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தனித் தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 15,742 மாணவர்கள், 15,741 மாணவிகள் என 31,483 மாணவ மாணவிகள் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
மேலும் 1,461 தனித் தேர்வர்களும் இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் எழுதினர். இதற்காக 149 தேர்வு மையங்களும் 13 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் 485 ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் வாழ்த்து தெரிவித்தார்.