திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 9, 2026 at 11:26 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. மேலும், இக்கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. எனவே, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

அந்த வகையில், வார விடுமுறையை நாளான இன்று (ஆக.9) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக குவிந்தனர். கோயிலின் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

கோயிலின் அருகில் உள்ள கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள், ரூ.100 தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல, சுமார் 2 மணி நேரம் கோயிலில் முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணற்றில் குழிக்கவும் காத்திருந்து பின்னர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.