46 ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெற்ற திருவூரல் பெருவிழா - KANCHIPURAM EKAMBARANATHAR

🎬 Watch Now: Feature Video

thumbnail
ஏகாம்பரநாதர் கோயிலில் நிகழந்த திருவூரல் பெருவிழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 6:20 PM IST

1 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், 46 ஆண்டுகளுக்குப் பிறகு திருவூரல் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. ஏகாம்பரநாதர் கோயில் பஞ்ச பூதங்களில் நிலத்திற்குரிய கடவுளாக பார்க்கப்படுகிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாசி மக, திருவூரல் பெருவிழா 46 ஆண்டுகள் கழித்து இன்று நடைபெற்றது.  

இக்கோயிலில், மாசி மாதம் மக நட்சத்திர தினத்தன்று, திருவண்ணாமலை மாவட்டம் அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் எழுந்தருளி மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெற்று வந்துள்ளது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இக்கோயிலில் மாசி மக திருவூரல் பெருவிழா நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீண்டும் 46 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு மாசி மக நட்சத்திரத்தன்று, திருவூரல் பெருவிழா இன்று காலை தொடங்கியது. உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details