குலசேகரன்பட்டினம் கோயிலில் ரூ. 48.80 லட்சம் காணிக்கை - KULASEKHARANPATTINAM TEMPLE
🎬 Watch Now: Feature Video

Published : January 13, 2026 at 5:21 PM IST
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 48.80 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இந்த தசரா திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.
இந்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 18 உண்டியல்கள் உள்ளன. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருகிறது. இந்த கோயிலில் உள்ள உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணிகள் நடந்தன.
அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 48 லட்சத்து 80 ஆயிரத்து 142 ரூபாய் இருந்தது. மேலும் தங்கம் 125.500 கிராமும், வெள்ளி 1100 கிராம் கிடைத்துள்ளது.