மகாநந்திக்கு 2 டன் காய்கறிகள் அலங்காரம் - THANJAI BIG TEMPLE MAHANDI IDOL
🎬 Watch Now: Feature Video

Published : January 16, 2026 at 4:32 PM IST
தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு 2000 கிலோ எடை கொண்ட காய்கறிகளுடன் நந்தி சிலைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றுது.
தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் மஹாநந்தியெம் பெருமான் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு பக்தர்கள் வழங்கிய சுமார் 2000 கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.
பின்னர் 108 பசு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடுகளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது குழந்தையுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.