காஞ்சி கோயிலில் தரிசனம் செய்த தெலங்கானா முதல்வரின் மகள் - CM REVANTH REDDY DAUGHTER IN KANCHI
🎬 Watch Now: Feature Video

Published : January 9, 2026 at 5:02 PM IST
காஞ்சிபுரம்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகள் இன்று (ஜன 9) காஞ்சி காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரநாதர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் மகள் நைமிஷா (Nymisha), கணவர் மற்றும் உறவினர்களுடன் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் திருக்கோயில் மற்றும் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காஞ்சி காமாட்சி அம்மன் தங்க கவசம் மற்றும் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு மலர் மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார். ஸ்ரீசக்கரம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு குங்கும அர்ச்சனை நடைபெற்ற பின் தீபாராதனையில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காஞ்சி காமாட்சி அம்மன் திருவுருவப்படம், குங்குமம் மற்றும் மலர் மாலை பிரசாதங்களாக வழங்கப்பட்டன. சிறப்பு தரிசனம் மேற்கொள்ள வந்த நபருக்கு மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.