தாமதமாக வந்ததால் வெளியே நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் - TEACHERS CAME LATE TO SCHOOL

🎬 Watch Now: Feature Video

thumbnail
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் வெளியே நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 19, 2026 at 5:13 PM IST

1 Min Read
Choose ETV Bharat

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளுடன் சேர்த்து ஆசிரியர்களும் வெளியே நிறுத்தப்பட்டனர்.

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இன்று வழக்கம் போல் திறன்தது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி இன்று திறந்த நிலையில் மாணவிகளுகளும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் இன்று காலை வந்தனர். இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி வேலை நேரம் தொடங்கியது.

அப்போது, பள்ளியின் நுழைவு வாயில் மூடப்பட்டது. இதனால் தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவிகள் வெளியே நிறுத்தப்பட்டனர். மேலும் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களும் வெளியே நிறுத்தப்பட்டனர். 

இதனையடுத்து பிரேயர் முடிந்ததும் மாணவிகளும் ஆசிரியர்களும் இனி தாமதமாக பள்ளிக்கு வரக் கூடாது என்ற தலைமை ஆசிரியரின் கண்டிப்புடன் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய ஆசிரியர்களே பள்ளிக்கு தாமதமாக வந்தது கவலை அளிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details