குருவிக்காக இருசக்கர வாகனத்தை வீடாக மாற்றிய ஆசிரியர் - குருவிக்கூடு
🎬 Watch Now: Feature Video

Published : July 8, 2026 at 9:47 AM IST
கள்ளக்குறிச்சி: குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தை அதற்கான வீடாக ஆசிரியர் ஒருவர் மாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாதுருகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன். இவர் ஆசிரியர் கூட்டுறவுச் சங்கத்தில் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் வெளியில் நிற்க வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஒரு குருவி ஒன்று கூடிய கட்ட தொடங்கியது. கூடுதானே கட்டுகிறது என அவர் எண்ண, அந்த குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது.
அந்த குட்டியைப் பார்த்த இவர், அதனின் கூட்டை கலைக்க மனமில்லாமல், அவரின் இரு சக்கர வாகனத்தைக் குருவிக்கு வீடாக மாற்றி அதனை அப்படியே விட்டுவிட்டார். இதனால் அவரின் வாகனத்தைப் பயன்படுத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டாலும், அந்த சின்ன குருவி குஞ்சை பார்க்கும்போது, அவரின் மனம் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது இரு சக்கர வாகனத்தில் குருவிக் கூடு கட்டி வசித்து வருவதை கலைக்காமல், அதற்காக வீடாக மாற்றிப் பாதுகாத்து வரும் அவரின் செயல் பலரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.