தமிழ்நாடு சட்டப்பேரவை நேரலை | சபாநாயகர் பதவியேற்பு; பெரும்பான்மையை நிரூபிக்கும் த.வெ.க; அதிமுக சட்டசபைக் குழு தலைவர் முடிவு - TAMIL NADU ASSEMBLY LIVE STREAMING

🎬 Watch Now: Feature Video

thumbnail
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் (TN-DIPR)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2026 at 9:31 AM IST

|

Updated : May 12, 2026 at 11:13 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், மாநிலத்தின் 13-வது முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து, நேற்று (மே 11) கூடிய சட்டப்பேரவையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், இன்று (மே 11) சட்டப்பேரவை தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் பதவியேற்கிறார். தொடர்ந்து, தவெக அரசு தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க, பேரவைத் தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடுத்த உள்ளார். இதனால், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களும், இக்கட்சிக்கு ஆதரவளித்த தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்கின்றனர்.

இதற்கிடையே, அஇஅதிமுக தரப்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23 உறுப்பினர்களுடன் ஒரு அணியிலும், 24 உறுப்பினர்களுடன் சி.வி.சண்முகம் தலைமையிலான எஸ்.பி. வேலுமணி மற்றொரு அணியிலும் இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது. அதனால், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க ஒரு தரப்பும், எஸ்.பி வேலுமணியை நியமிக்க மற்றொரு தரப்பும் இடைக்கால சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதன் முடிவையும் இன்று பேரவைத் தலைவராக பொறுப்பேற்கும் ஜே.சி.டி. பிரபாகர் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

Last Updated : May 12, 2026 at 11:13 AM IST

ABOUT THE AUTHOR

Tamil Nadu's geography is as such it shares a coastal border with India’s neighbour Sri Lanka. Its political discourse is unique. ETV Bharat Tamil Nadu has a dedicated bureau in the capital and a batch of journalists covering the rest of the state. It brings you stories which matter to the region and from the state's perspective. Its coverage is not limited to the latest happenings but also will include unique and extraordinary stories from across the country and elsewhere from the globe as well....view details