நேரலை | தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு - TVK VIJAY CONFIDENCE VOTE
🎬 Watch Now: Feature Video

Published : May 13, 2026 at 9:29 AM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், அறுதி பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.
17-ஆவது சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரானது மே 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று, சபாநாயகரான ஜே.சி.டி பிரபாகரும், துணை சபாநாயகராக எம்.ரவிசங்கரும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 3வது நாள் கூட்டத்தொடரான இன்று, தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதாவது ஆளும்கட்சிக்கு உறுப்பினர்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் நடைமுறை இது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்துவிட்டதால் தற்போது 107 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் உள்ளனர். ஆனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
எனவே, இந்த வாக்கெடுப்பில் சபாநாயகர் நீங்கலாக மீதமுள்ள தவெக உறுப்பினர்களும், ஏற்கனவே ஆதரவளித்திருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பர். இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் தவெக அரசுக்கு சுலபமாக அறுதி பெரும்பான்மை கிடைக்கும். இருப்பினும், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், ஈபிஎஸ் தரப்பு மற்றும் திமுகவினர் ஆதரவளிக்க போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.