மணக்கோலத்தில் பி.எட் தேர்வு எழுதிய மாணவிகள் - BRIDE WRITES EXAM

🎬 Watch Now: Feature Video

thumbnail
மணக்கோலத்தில் பி.எட் தேர்வு எழுதிய மாணவிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 13, 2026 at 1:01 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: திருமணம் முடிந்த கையோடு மாணவிகள் பி.எட் தேர்வு எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பி.எட். படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு தற்போது பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பி.எட். மாணவ மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில், குந்தவை நாச்சியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவி, மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதினார். இவருக்கு கருணாகரன் என்பவருடன் நேற்றுதான் திருமணம் நடைபெற்றது.

அதே போல், பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் பகுதியை சேர்ந்த சத்யகீதா என்ற மாணவிக்கும் நேற்று தான் திருமணம் நடந்துள்ளது. அவரும் திருமணம் முடிந்த கையோடு, தேர்வு மையத்துக்கு வந்து பி.எட் பருவத் தேர்வினை எழுதினார். எனினும், இவர் கல்வி நிறுவனத்தின் சீருடையுடன் வந்துதான் தேர்வு எழுதினார். இவர்கள் இரண்டு பேரும் தஞ்சையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details