அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் பாடகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துடன் தரிசனம் - SINGER UNNIKRISHNAN
🎬 Watch Now: Feature Video

Published : July 20, 2026 at 4:40 PM IST
மயிலாடுதுறை: பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் பக்த மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் உயிர்பித்த தலம் என்பதால் இக்கோயிலில் 365 நாட்களும் திருமணம் நடைபெறும்.
ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் 60 வயது பூர்த்தியில் திருமணம், 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 100 வயதில் கனகாபிஷேகம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்து வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் நாள்தோறும் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர். அந்த வகையில், தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன், தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு மனைவி பிரியா உன்னிகிருஷ்ணன் மற்றும் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்தார்.
அப்போது, பாடகர் உன்னிகிருஷ்ணனின் குடும்பத்திற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருக்கோயிலுக்குள் சென்ற உன்னிகிருஷ்ணன், அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மாளை மனமுருக சுவாமி தரிசனம் செய்தார். மேலும், திருக்கோயில் குருக்கள், கோயிலின் வரலாறுகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பாடகர் உன்னிகிருஷ்ணனை பார்த்த பக்தர்கள் பலர், அவருடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகளான உத்ரா உன்னிகிருஷ்ணன், பாடலுக்காக சிறு வயதிலேயே தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.