தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை கட்டுமானப் பணி - SANITATION WORKERS REST ROOMS
🎬 Watch Now: Feature Video

Published : March 9, 2026 at 2:41 PM IST
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு அருந்தும் அறை, ஓய்வு அறைகளுக்கான கட்டுமானப் பணிகளை சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (OMR) சாலை மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி 195-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து, ரூ.73.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு அருந்தும் அறை, ஓய்வு அறை அமைக்க கட்டுமான பணி துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி 195வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்காக அமைக்கப்படும் கட்டடம் குறித்த வரைப்படத்தை முழமையாகப் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.