மழலையர் பள்ளி மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு - SCHOOL ALUMNI MEET
🎬 Watch Now: Feature Video

Published : January 4, 2026 at 5:26 PM IST
கோயம்புத்தூர்: மழலையர் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள், தற்போது தாத்தாக்களாக மீண்டும் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சியை அடுத்த தனியார் மழலையர் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு மழலையர் பள்ளி குழந்தைகளாக பயின்ற மாணவர்கள் இன்று தள்ளாடும் வயதில் தங்களது முன்னாள் பள்ளி நண்பர்களையும், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களையும் சந்தித்து மகிழ்ந்தனர்.
மேலும் இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தள்ளாடும் வயதில் உள்ள ஆசிரியர்களிடம், தங்களது சிறுவயது காலத்தில் செய்த சிறு குறும்புகளுக்காக தடி அடி வாங்கியது போல, தற்போது அவர்களிடம் மழலைப்பள்ளி நினைவுகளை மீட்டெடுக்க, செல்லமாக சிறிய குச்சியால் தடியடி பெற்றுக் கொண்டனர்.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தன்னுடைய பால்ய கால நினைவுகள் குறித்து பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் தற்போது மீண்டும் சந்தித்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.