அரசியல்வாதிகளுக்கு நன்றியே இல்லை - சசிகலா பேச்சு - SASIKALA SPEAK ABOUT DMK
🎬 Watch Now: Feature Video

Published : April 20, 2026 at 2:40 PM IST
வேலூர்: அரசியல்வாதிகளுக்கு பொதுவாக நன்றியே இல்லை என அபுமமுக பொதுச்செயலாளர் சசிகலா வருத்தம் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அபுமமுக கட்சி சார்பில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தபித்தாவை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா புதிய பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், "மற்ற அரசியல்வாதிகளை போல் நான் கிடையாது. அரசியல்வாதிகளுக்கு பொதுவாக நன்றியே இருக்க மாட்டேங்குது. அப்படி இருப்பவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் எப்படி நன்றி வரும்?
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. 170-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 220 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சசிகலா பேசினார்.