ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போன சேவல் - ROOSTER EXHIBITION

🎬 Watch Now: Feature Video

thumbnail
திண்டுக்கல் சேவல் கண்காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 3:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திண்டுக்கல்: சேவல் இனம் அழிவதை தடுப்பதற்கு அகில இந்திய அளவிலான சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில், ஒரு சேவல் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் அதனை தர மறுத்துள்ளார்.

சேவல் இனம் அழிந்து வருவதை தடுப்பதற்கு, அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் 11 வது ஆண்டு உலக அளவிலான ‘கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி’ திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சேவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதே போல், தமிழ்நாட்டில் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கண்காட்சியில் உள்ள சேவல்களை அதன் உயரம், மூக்கு, வால், கொண்டை, கம்பீரம் ஆகியவற்றை வைத்து நடுவர்கள் தேர்வு செய்தனர். இதில், சிறந்த சேவல்களின் உரிமையாளர்களுக்கு எல்இடி டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

இந்த கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்ட விசிறிவால் சேவல் ஒன்று ரூ.3 லட்சத்திற்கு விலை கேட்கப்பட்டது. ஆனால், அதன் உரிமையாளர் அதனை விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details