குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - VAIGAI DAM WATER LEVEL DECREASE

🎬 Watch Now: Feature Video

thumbnail
வைகை அணையில் நீர்மட்டம் குறைந்துள்ள வீடியோ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 3:47 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருவதால், 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணைக்கு முல்லைப் பெரியாறு, மூல வைகையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக நீர்வரத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் வைகை அணையில் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, மூல வைகை ஆற்றுப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பொழிவு இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணையில் நீர்மட்டமும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது.

தற்போது 71 அடியில் 42 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கு பெரியாற்றிலிருந்து 263 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 69 கன அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 1,122 மில்லியன் கன அடியாக இருக்கின்றது. இதன் காரணமாக, கோடைக் காலத்தின் போது அணையை நம்பியுள்ள 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோடை மழை பெய்தால் மட்டுமே அணைக்கு ஓரளவுக்கு நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details