குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த புதுவை முதலமைச்சர் - THENI
🎬 Watch Now: Feature Video

Published : July 12, 2026 at 7:43 PM IST
தேனி: குச்சனூர் கிராமத்தில் உள்ள சுயம்பு ஶ்ரீ சனீஸ்வரர் பகவான் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தரிசனம் செய்தார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் கிராமத்தில் உள்ள சுயம்பு ஶ்ரீ சனீஸ்வரர் பகவான் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஜூலை 12) சாமி தரிசனம் செய்தார். சனி தோஷ நிவர்த்தி ஸ்தலமான இக்கோயிலுக்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, காக்கை உருவ சிலைக்கு பொறி படைத்தும், எள் தீபம் ஏற்றியும் வழிபட்டார். பின்னர் மூலவருக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுக்கு வருவது வழக்கமான ஒன்று. இங்கு அரசியல் தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை" என்றார்.
தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்ட அவர் பின்னர் போடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றார். அங்கு இருந்த நவ பாசன முருகன் சிலைக்கு பூஜை செய்தார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுவை வழங்கி மகிழ்ந்தார். மேலும், அங்கு தேநீர் அருந்திய அவர், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.