முதல்வர் விஜய் செல்லும் வழியில் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி போராட்டம் - LIQUOR SHOP ISSUE PROTEST
🎬 Watch Now: Feature Video

Published : June 1, 2026 at 12:00 PM IST
சென்னை: ஈஞ்சம்பாக்கத்தில், முதலமைச்சர் செல்லும் வழியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமான் காலனி அருகே அரசு மதுபானக் கடை (4511) அமைந்துள்ளது. இக்கடை கோயில், தேவாலயம், மசூதி, பள்ளிக்கூடம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஆன்மீக தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவில் இந்த மதுபான கடையும் ஒன்றாகும்.
இருப்பினும், இந்த அரசு மதுபானக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை மூடப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாங்கரை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கடை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முதலமைச்சர் செல்லும் வழியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.