நீடிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு - பொதுமக்கள் வேதனை - CYLINDER ISSUE IN THIRUPPATHUR

🎬 Watch Now: Feature Video

thumbnail
நீடிக்கும் சிலிண்டர் தட்டுப்பாடு - பொதுமக்கள் வேதனை (ETV Bharat Tamil Nad)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 13, 2026 at 7:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருப்பத்தூர்: சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நீடிப்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எரிபொருள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. இதனால், கடந்த 5 நாட்களாக இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெட்ரோல் நிலையங்கள் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். 

மேலும், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படும் தொலைபேசி எண் செயல்படவில்லை என்பதால், கியாஸ் விநியோக ஏஜென்ஸிகளுக்கு பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் படையெடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கியாஸ் ஏஜென்ஸிகள் முன்பும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்களை மூடப்பட்டுள்ளன. இதனால், அதன் உரிமையாளர்களும், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ABOUT THE AUTHOR

...view details