தொகுதி மறுவரையறை: கருப்பு பலூனை பறக்கவிட்டு எதிர்ப்பு - DELIMITATION BILL

🎬 Watch Now: Feature Video

thumbnail
கருப்பு பலூனை பறக்கவிட்டு எதிர்ப்பு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 16, 2026 at 8:20 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தஞ்சாவூர்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கருப்பு பலூனை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் விதமாக, தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

ஆனால், இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்பு கொடி ஏற்றியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர திமுக கட்சி பணிமனையில் இருந்து திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதில் காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து, நூற்றுக்கணக்கான கருப்பு நிற பலூன்களை ஏந்தி கட்சி அலுவலகத்திலிருந்து அருகில் உள்ள தனியார் கார் நிறுத்தும் வரை சென்ற அவர்கள், ஒரே சமயத்தில் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details