காமராஜரை இழிவுபடுத்தியதாக ஆர்ப்பாட்டம் - SATTUR PROTEST AGAINST YOUTUBER

🎬 Watch Now: Feature Video

thumbnail
யூடியூபரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 5:38 PM IST

1 Min Read
Choose ETV Bharat

விருதுநகர்: காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக யூ டியூபரை கண்டித்து சாத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் யூ டியூபரை கண்டித்து, அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமை தாங்கினார். 

மேலும் அந்த சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, யூ டியூபர் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

பின்னர், யூடியூபர் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற போது, அதை தடுக்கச் சென்ற சாத்தூர் நகர காவலருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக சாத்தூர் நகரில் உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details