பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பற்றிய பள்ளி வாகனம் - தீப்பற்றி எரிந்த பள்ளி வாகனம்

🎬 Watch Now: Feature Video

thumbnail
பள்ளி பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 21, 2026 at 8:10 PM IST

1 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கக்கூடிய மாணவர்களை தினந்தோறும் அப்பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (ஜூலை 21) காலையில் வழக்கம்போல் பள்ளி மாணவர்கள் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே வந்தபோது, பேருந்தின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியது. அதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்தி அவசர கதியில் பள்ளி மாணவர்கள் அனைவரையும் உடனடியாக கீழே இறக்கினார்.

சிறிது நேரத்திலேயே பேருந்தில் இருந்து அதிக புகை வந்து, தீப்பற்றி எரிந்தது. வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்க் முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பங்க் ஊழியர்களும் ஓடிச் சென்று மாணவர்களை மீட்டு, தீயை அணைக்கும் கருவி கொண்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.

பேருந்திலிருந்த மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதால், நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் வேறு வாகனம் எடுத்துவரப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.