LIVE: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்; ஈபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு - PRIME MINISTER

🎬 Watch Now: Feature Video

thumbnail
பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 5:04 PM IST

1 Min Read
Choose ETV Bharat

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குறிப்பாக, இன்று காலை புதுவையில் நடைபெற்ற நலத்திட்ட துவக்க விழாவில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து மதுரை சென்ற பிரதமர் மோடி, ரூ.4000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மண்டேலா நகர் நகர் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக காவல்துறை சார்பாக, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 20-க்கும் மேற்பட்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் முகப்பில் பெரியார் அண்ணா படங்களை கொண்ட வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details