LIVE: குடியரசு தின விழா கொண்டாட்டம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றினார் - REPUBLIC DAY 2026

🎬 Watch Now: Feature Video

thumbnail
குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் (PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 26, 2026 at 8:56 AM IST

1 Min Read
Choose ETV Bharat

டெல்லி: இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளான இன்று, நாடு முழுவதும் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு கொடியேற்றுகிறார். நமது நாட்டின் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்களும், டி-90 பீரங்கிகளும், அனைத்து மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், ரஃபேல், சுகோய் விமானங்களின் வான் சாகசங்களும், 2500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறவுள்ளன. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கவுன்சில் தலைவர் ஆன்டோனியா கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அணிவகுப்பானது கடமைப் பாதையில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி, சுமார் 90 நிமிடங்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details