ராமநாதசுவாமி கோயிலில் காலாவதி தேதி இல்லாமல் வழங்கப்படும் பிரசாதம் - RAMANATHASWAMY TEMPLE PRASAD ISSUE
🎬 Watch Now: Feature Video

Published : May 31, 2026 at 2:40 PM IST
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலாவதி, உற்பத்தி தேதி குறிப்பிடாமல் பிரசாதம் வழங்கப்படுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பின்னர் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழக்கமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோயில் பிரசாதத்தில் காலாவதி தேதி மற்றும் உற்பத்தி தேதி ஆகியவை குறிப்பிடாமல் வழங்கப்படுவதாக பக்தர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
கோயில் நிர்வாகத்தின் இந்த செயல் பக்தர்கள் மத்தியில் உடல் உபாதை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்த நிலையிலும், ராமநாதசாமி திருக்கோவிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் பிரசாதம் வழங்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.