திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை! - PM MODI TRICHY MEETING
🎬 Watch Now: Feature Video

Published : March 11, 2026 at 6:16 PM IST
2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு என தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெற்று வரும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
ஏற்கெனவே ஜனவரியில் மதுராந்தகத்திலும், பிப்ரவரியில் மதுரையிலும் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களில் 3-வது முறையாக தமிழகம் வந்துள்ள மோடி, திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதற்காக, திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சி தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர்.
முன்னதாக, பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், சென்னையை அடுத்த மணலியில் ரூ.1,490 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலவை ஆலையை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளையும் அவர் திறந்து வைத்தார். கோயம்புத்தூர், திருநெல்வேலி, காரைக்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட எட்டு இடங்களில் இருந்து புதிய ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.