பிரதமர் மோடி கோவையில் தேர்தல் பிரச்சாரம் - நேரலை - PM MODI IN COIMBATORE

🎬 Watch Now: Feature Video

thumbnail
பிரதமர்நரேந்திர மோடி (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 18, 2026 at 6:33 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக - தே.ஜ கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக, கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட மேடையும், சுமார் 5 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவர்களும், பிரதமரை பார்க்கும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மைதானத்துக்கு அருகே தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க வந்துள்ள இதே நாளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் கோயம்புத்தூர் வந்துள்ளதால், மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details