நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி - நேரலை - MODI ADDRESSING NATION

🎬 Watch Now: Feature Video

thumbnail
பிரதமர் மோடி (PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 18, 2026 at 8:32 PM IST

|

Updated : April 18, 2026 at 9:02 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நாடாளுமன்ற மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக உயர்த்துவதற்கான அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதாவை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை,  மத்திய பாஜக அரசால் பெற முடியவில்லை. மசோதா மீது மக்களவையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு தோல்வியடைந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தற்போது காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார்.  

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது, இத்தகைய  பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி நாட்டு  மக்களுக்கு உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், 2016 நவம்பரில் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியபோது பணமதிப்பிழப்பு  விஷயத்தை அதிரடியாக அறிவித்திருந்தார். அதன் பின்னர், கொரோனா காலத்தில் பொது முடக்கத்தை அறிவித்தபோதும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தேர்தல் நேரத்தில்  பிரதமர் மோடியின இந்த  உரை நாட்டு மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Last Updated : April 18, 2026 at 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details