பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு - OPS WELCOMED BY FAMILY WITH AARTI
🎬 Watch Now: Feature Video

Published : March 2, 2026 at 4:56 PM IST
தேனி: திமுகவில் இணைந்த பிறகு பெரியகுளத்துக்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்த நிலையில் முதன்முறையாக இன்று தேனி மாவட்டம் திரும்பினார். அப்போது அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக நிர்வாகிகளைச் சந்தித்த பின் இரவு போடியில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள தனது வீட்டுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்களும் திமுக நிர்வாகிகளும் அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். அதன் பின்பு ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் ஏராளமானோர் அவரது இல்லத்துக்கு வருகை தந்து திமுகவில் இணைந்ததற்காக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.