LIVE: விக்ஷித் பாரத் 2047-ஐ கட்டமைப்பதற்கான தேசிய மாநாடு - VIKSHIT BHARAT
🎬 Watch Now: Feature Video

Published : January 8, 2026 at 10:27 AM IST
|Updated : January 8, 2026 at 12:27 PM IST
ஐதராபாத்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அகாடமி (ASTC), தேசிய அறிவியல் அகாடமி (NASI) ஆகியவை முன்னணி தெலுங்கு இதழான 'ஈநாடு' பத்திரிகையுடன் இணைந்து ஒரு தேசிய அளவிலான மாநாட்டை ஐதராபாத்தில் நடத்துகிறது.
'ஆய்வகத்தில் இருந்து சமூகம் வரை: விக்ஷித் பாரத் 2047-ஐ கட்டியெழுப்புவதில் அறிவியல் தொலைத்தொடர்பின் பங்கு' ('Lab To Society: Role Of Science Communication In Building Viksit Bharat @ 2047) என்ற தலைப்பில் இந்த மாநாடு பி.எம். பிர்லா அறிவியல் மையத்தில் நடக்கிறது.
அறிவியல் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மூலமாக சமூகத்திற்கு அறிவியல் ரீதியான அறிவை வழங்கி, அவர்களை தேச வளர்ச்சிக்கு பயன்படுத்துவதே இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம் ஆகும்.
ராணுவம், விண்வெளி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய துறைகள் குறித்து இந்த மாநாட்டில் நிபுணர்கள் விரிவான விவாதம் நடத்தவுள்ளனர். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் செளமியா சுவாமிநாதன் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இதுதவிர, 'நிலையான எதிர்காலத்துக்காக மீண்டும் அறிவியல் தொடர்பு கற்பனை' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இந்த மாநாட்டில் நடைபெறுகிறது.