ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - TIRUPATHUR BUS ACCIDENT
🎬 Watch Now: Feature Video

Published : May 27, 2026 at 10:50 AM IST
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, அரசு பேருந்து சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோர பள்ளத்தில் இறங்கி, அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 10க்கும் மேற்பட்டோர், மேல் சிகிச்சைக்காக, வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.