120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்! - MINI BUS ACCIDENT IN NILGIRIS
🎬 Watch Now: Feature Video

Published : January 7, 2026 at 6:42 PM IST
நீலகிரி: உதகை அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் விபத்துக்குள்ளானது. அதில், 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்த நிலையில், 3 பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து இன்று (ஜன.7) மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி மினி பஸ் 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது மினி பஸ் கல்லக்கொரை ஹாடா பகுதியைக் கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
அதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்த அனைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், உருண்டு சென்ற மினி பஸ் தலைகீழாகக் கவிந்ததால் அப்பளம் போல் நொறுங்கியது. இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.