LIVE: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை - MODI IN ISRAEL
🎬 Watch Now: Feature Video

Published : February 25, 2026 at 9:24 PM IST
டெல் அவிவ்: அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டு சென்ற நிலையில், அந்நாட்டு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்திய பிரதமரின் வருகையையொட்டி, பிரதமர் மோடியை ‘அன்பான நண்பர்’ என்று வர்ணித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பயணத்தின் முக்கிய அம்சமாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார்.
இந்தியா-இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்த ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின் போது இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடி தற்போது மீண்டும் இஸ்ரேல் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இருநாட்டு வர்த்த தொடர்புகள் தொடர்பாக புதிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.