ஜெயலலிதா பிறந்த நாள் விழா: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு - JAYALALITHA 78TH BIRTHDAY
🎬 Watch Now: Feature Video

Published : February 27, 2026 at 6:47 PM IST
காஞ்சிபுரம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த பிறந்த 18 பச்சிளம் குழந்தைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தங்க மோதிரம் அணிவித்தார்.
தமிழகமெங்கும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள், அன்னதானம் வழங்குதல் என பல்வேறு வகையில் கொண்டாடி வந்தனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 பச்சிளம் குழந்தைகளுக்கு அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலா 1 கிராம் தங்க மோதிரங்களையும், குழந்தைக்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.